செய்திகள்

திருவள்ளூர் : அரசு நடுநிலை பள்ளி காலை உணவில் பல்லி – 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. பள்ளி மாணவ – மாணவியருக்கு காலை சிற்றுண்டியாக, கோதுமை ரவா கிச்சடியும், சாம்பாரும், நேற்று காலை வழங்கப்பட்டது.

அதை சாப்பிடும்போது, ரவா கிச்சடியில் பல்லி செத்து கிடப்பதை கண்டு, மாணவ – மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், காலை உணவை சாப்பிட்ட 40 மாணவ – மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதாவை, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு, பள்ளியின் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி குறித்து புகார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உணவு மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இரு சமையலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button