
நசரத்பேட் வரதராஜபுரத்தைச் சேர்ந்த விஷால், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்க்க வந்திருந்தார்.
அப்போது, குழந்தையை காருக்குள் அமர வைத்துவிட்டு வெளியே நின்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கதவு தானாக பூட்டிக் கொண்டது.
இந்நிலையில், சாவியும் காருக்குள்ளேயே இருந்ததால் கதவை திறக்க முடியவில்லை. சிறுது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியதை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.


