க்ரைம்
Trending

டிராக்டர்களில் மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலையான சிறுமலை அடிவார பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொடர்புடைய பகுதிகளை ஒட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன.

வனத்துறை மற்றும் அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு இந்த கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் உள்ளன. இங்கு வனத்துறையினர் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பலன் தரக்கூடிய தேக்கு  , புளியன் , வேம்பு , இலவம் பஞ்சு , மஞ்சள்நெத்தி உட்பட பல வகையான மரங்கள் ஆயிரக்கணக்கில் நட்டு வளர்த்தனர் .

               இவற்றை வெட்டவோ அல்லது வேறு வகை பயன்பாட்டுக்கோ இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில் தினந்தோறும் பின்புற நம்பர் இல்லாத ட்ரைலருடன் கூடிய டிராக்டர்களில் வெட்டி கடத்தி திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள மர அறுவை மில்களில் ஒரு கும்பல் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் . 

தினமும் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் மதியம் ஒரு மணி முதல் நான்கு மணி வரையிலும் மரங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட லோடுகள் நத்தம் சாலை வழியாக வந்து மேட்டுப்பட்டி உட்பட நகரத்தில் உள்ள மர அறுவை மில்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் 

இது குறித்து விசாரித்ததில் பட்டா நிலத்தில் உள்ள மரங்களை மட்டுமே வெட்டுவதாக கூறுவதாகவும் ஆனால் தேக்கு போன்ற தமிழ்நாடு வன சட்டத்தில் உள்ள மரங்களையும் வெட்டி வருவதாகவும் பட்டா நிலங்களில் வெட்டினாலும் வருவாய் மற்றும் வனத்துறையில் அனுமதி பெற்று வெட்டவேண்டிய மரங்களையும் எந்தவித அனுமதியும் பெறாமல் வெட்டி கடத்துவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன .

மேலும் தொடர்ந்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட லோடுகள் கொண்டுசெல்லும் அளவுக்கு எந்த பட்டா நிலங்களில் இவ்வளவு மரங்கள் உள்ளன என தெரியிடவில்லை என்று வனத்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்டு தற்போது நல்ல நிலையில் மரங்களாக வளர்ந்து பலன் கொண்டிருக்கும் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button