செய்திகள்

கரூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை மற்றும் குளித்தலை பகுதிகளில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அடிப்படை ஊதியம் ரூ. 18,000 வழங்குதல், பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிச்சுமையை குறைத்தல், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button