
சென்னை கொரட்டூர் ஏரிக்கரையில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு உலக ஏரிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடந்து கொரட்டூர் ஏரியை பாதுகாப்பதுடன் அப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பசுமைப் புரட்சி திட்டத்தின் கீழ் ஏரிக்கரையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் பணிகள் உற்சாகமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.



