
பெங்களூரு–புனே தேசிய நெடுஞ்சாலையில் சிரா அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி சேதமடைந்ததுடன், அதில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் பால் சாலையில் வழிந்தோடியது. இதை பார்த்த பொதுமக்கள் பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களுடன் வந்து பாலை பிடித்துச் செல்ல முயன்றனர். இந்நிலையில் விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

