செய்திகள்

எர்ணாகுளம் : பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி திடீரென சாலையின் குறுக்கே திரும்பியதால் அவர் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் வாகனத்தை திடீரென திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button