
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் சித்திரை செல்வன். இவர் 2020ம் ஆண்டு, வீட்டின் அருகே இருந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி சைக்களில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி சித்திரை செல்வனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
