க்ரைம்

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்

ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 18 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இந்தக் கும்பல் வாகனத் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில், தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய சந்திரகிரி போலீசார், கும்பலை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், ஸ்ரீனிவாசமங்காபுரம் அருகே காப்புக்காடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மீட்கப்பட்டன. இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு திருப்பதி மாவட்ட எஸ்.பி. எல். சுப்பராயுடு ஐ.பி.எஸ் பாராட்டு தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button