
கீழ்வேளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் – பிரவீனா தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனா தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் பிரவீனா நாகப்பட்டினம் மாவட்டம் குறுக்கத்தி பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறுக்கத்தி பகுதிக்கு வந்த ரமேஷ், பிரவீனாவுடன் தகராறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி சென்றார். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிரவீனாவின் மகள், தாய் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு சப்தமிட்ட நிலையில், அங்கு வந்த ஊர் மக்கள் இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.