அரசியல்

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியனின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் வீட்டிலும், செந்தில் பாலாஜியின் நண்பர் கார்த்திக் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்ற நிலையில், மாவட்டத்தின் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button