க்ரைம்

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிஎம்டிஏ ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகத்தில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, குத்துச்சண்டைப் போட்டிகளில் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், சில மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், மாணவர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகுதியான நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமித்து, புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். மேலும், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலையிட்டு, போட்டிகள் வெளிப்படையாகவும் பாரபட்சமின்றியும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button