க்ரைம்
Trending

கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பிரிவு நத்தம் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் மகன் சையது ஒலி ஹக்கீம் (33) மாரிமுத்து மகன் மருதுபாண்டி (30) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும் என்ற போது சென்னையில் இருந்து துவரங்குறிச்சி வழியாக இருந்து மதுரை நோக்கி ஜெசன்கிருபாகரன்(32)(சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும்) என்பவர் ஒட்டி வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பைக்கில் பயணம் செய்த
சையது ஒலி ஹக்கீம், மருதுபாண்டி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த சையது ஒலி ஹக்கீம் மாற்றுத்திறனாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் கார் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button