திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2-ம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் W.8 பேருந்தில், மருதாடு முதல் ஓசூர் வரை பயணிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும், இதனால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும் பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து பணியாளர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் உரிய விசாரணை நடத்தி, மாணவர்கள் மற்றும் பேருந்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
