
நேற்று (20.08.2026 ) சிறுமலை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கொடைரோடு வன பிரிவு பகுதியில் உள்ள காப்பு காடு பகுதிகளில் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர் .
அப்போது தொழுக்காடு சந்தை பொட்டல் பகுதியில் சிறுமலை வன பிரிவு அகஸ்தியர்புரம் கருப்பு கோவில் பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வரும் கருப்பையா மகன் ஆண்டி சாமி (வயது-36) சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி வந்தது கண்டு தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர் .
விசாரணையில் ஆண்டிசாமி நாட்டுதுப்பாக்கி வைத்து வன உயிரினங்களை வேட்டையாட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கி , வெடி மருத்துகள் , ஈய குண்டுகள் மற்றும் ஒரு கருங்காலி கட்டை பறிமுதல் செய்யப்பட்டு சிறுமலை வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து மேல் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் மாவட்ட வன அலுவலர் நாக சதீஸ் ஜிடி வாலா IFS அவர்களின் உத்தரவுபடி வன உயிரின குற்றவாளி ஆண்டிசாமி மீது வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை அறிக்கை பெற்று நீதிபதி முன்னர் அஜர்படுத்தி 15 நாட்கள் நீதி மன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
