க்ரைம்
Trending

வடமதுரையில் பெண்ணை வழிமறித்து பைக்கில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த நபர் கைது

திண்டுக்கல் வடமதுரை, கலைமகள் பள்ளி அருகே நேற்று இரவு வேலை முடித்து வந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சித்திரைவேல்(38) என்பவர் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சித்தூர் குளம் பகுதிக்கு அழைத்து சென்று பெண்ணை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை தாக்கியும், காலால் மிதித்தும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்தப் பெண் சத்தமிட்டுக்கொண்டே அங்கிருந்து தப்பித்து ஓடி வந்தார். காயம் அடைந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடந்த சம்பவம் குறித்து செய்தி வெளியான நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS உத்தரவின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு சித்தரவேலை கைது செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button