
இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்த நிலையில், மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் புதிய போன்களை வாங்கிச் சென்றனர்.
ஐபோன் 18 புரோ, புரோ மேக்ஸ் மற்றும் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ உள்ளிட்ட புதிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் கடந்த 9-ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஐபோன் டுயோவின் விலை ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் எனவும், ஐபோன் 18 புரோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ஐபோன் 18 புரோ மேக்ஸ் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர், விற்பனை தொடங்கியதையடுத்து டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆப்பிள் விற்பனை நிலையங்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய மாடல்களை வாங்கிச் சென்றனர்.
பெங்களூருவில் உள்ள ஆசியா மால் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள டிஎல்எப் வணிக வளாகத்திலும் புதிய ஐபோன் மாடல்களை வாங்குவதற்காக ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
