டிரெண்டிங்

வருட கணக்காக காத்திருந்த பழங்குடியினர் : நிறைவேற்றிய அதிகாரிகள்

சிவகிரி அருகே, பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதி சான்றிதழ்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தலையணையில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் (NALSA) ‘SAMVAD’ திட்டத்தின் கீழ் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் முருகவேல் அவர்கள் கலந்து கொண்டு, தகுதியான பழங்குடியின பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ்களை நேரில் வழங்கினார்.

இந்தச் சிறப்பு நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்டப்பணிகள் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் அரசுக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button