
ஸ்பெயின் நாட்டில் உள்ள பூனோல் நகரில் தக்காளி சண்டை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தது . இந்த திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசிக் கொண்டு திருவிழாவில் மகிழ்வர் . ஸ்பெயின் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் லா டோமாடினா எனப்படும் புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா நடத்தப்படுவது வழக்கம் 1945ம் ஆண்டில் ஸ்பெயினில் வீதி ஒன்றில் நிகழ்ந்த சிறிய சண்டையில், காய்கறி வண்டியில் இருந்த தக்காளிகளை எடுத்து வீசிக்கொண்டனர். அப்போது முதல் நடத்தப்படும் இவ்விழா சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தக்காளி சண்டை நேற்று நடைபெற்ற நிலையில், மலை போல ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு இருந்த தக்காளிகளை, கைகளால் நசுக்கி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வீசி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு தக்காளி சண்டைக்காக மொத்தம் 165 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் தக்காளிகளை வீசி கொண்டாடியதால், பூனோல் நகர் முழுவதுமே செந்நிற வண்ணத்தில் காட்சி அளித்தது.

