
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாக எஸ்.யூ.வி. வகை கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனிடையே சொந்த வேலையாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது கார் வீட்டில் இருக்கும் போது திருடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அவர் கிரேன் உதவியுடன் காரை வீட்டின் இரண்டாவது மாடிக்கு தூக்கிச் சென்று அங்கு நிறுத்தியுள்ளார். இதையடுத்து, கிரேன் மூலம் கார் இரண்டாவது மாடிக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

