திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பாசனப்பகுதியில் விவசாயிகள் பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது குடகனாறு ஆற்றுப்படுகை பழமைவாய்ந்த குடகனாறு இன்று பால்பட்டு கூவமாக மாறி உள்ளது.
இதற்குக் காரணமாக விளங்குவது திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு மேல் பகுதியில் நரசிங்கபுரம் என்ற பச்சைஇடத்தில் சட்ட விரோதமாக 10 அடிக்கு மேல் தடுப்பணையை கட்டியது தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் நிபுணர் குழுவைக் கொண்டு ஆராய கடந்த கால அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆய்வு செய்த நிபுணர் குழு ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது நடைமுறைப்படுத்தாமலும் அதனை இன்று வரை நடைமுறைப்படுத்தாமலும் ஆய்வறிக்கையை வெளியிடாமலும் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த ஆய்வறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்தி சட்டவிரோதமாக கட்டப்பட்ட தடுப்பு சுவரை அகற்றி ஆத்தூர் முதல் அரவக்குறிச்சி வரையிலான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீராதாரத்தை தெறிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வேடசந்தூர் வட்டார வர்த்தகர்கள் சங்கம் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது

