
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காகரூ.35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பிரதமர் மோடி நாளை செப்டம்பர் 8ம் தேதி வதோதராவுக்குச் செல்கிறார். இதை அடுத்து, மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தட மேம்பாடு, புதிய ரயில் பாதைகள், இரட்டை ரயில் பாதை திட்டங்கள் மற்றும் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.மேலும், ரூ.9,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 329 கி.மீ. தூரத்திற்கான 3 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதன் மூலம் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து, வதோதரா–டாண்டா ரோடு இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனால் வதோதரா, சோட்டா உதேபூர், அலிராஜ்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பயனடைவார்கள்.



