
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக அவர் அரசு வாகனத்தில் சென்னை வந்துள்ளார். இதனிடையே, அமைச்சரின் குடும்பத்தினர் அவரது சொந்த காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னை காட்டாங்குளத்தூர் அருகே சென்றபோது, எதிரே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இறையன்பு என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்துக்கான காரணம் மற்றும் காரை ஓட்டி வந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


