
சென்னை அடுத்த நொளம்பூரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டடத் தொழில் செய்து வந்தவர் அபிஜித். அவரை போதையில் வந்த 4 பேர் மறித்து பணம் கேட்டு, அபிஜித் பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் இருந்தவர்கள் அபிஜித்தை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 12-ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

