
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் பாலாஜி கைது செய்யப்பட்டு சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
