
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், நீர் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் நீர் திறப்பு 12,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகளில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


