க்ரைம்
Trending

செயின் பறிப்பு – கேரள பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை

  • கன்னியாகுமரி மாவட்டம் – அருமனை அருகே மேல்புறம் பகுதியில் கணேசன் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார்.
  • 2022 டிசம்பர் 10-ம் தேதி பைக்கில் ஜோடியாக வந்த இருவரில், ஒரு பெண் பழம் வாங்குவது போல் நடித்து கணேசனின் மனைவி கிறிஸ்டினாவிடம் இருந்து 6.5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
  • சம்பவ இடத்தில் தவறவிட்ட செருப்பு மற்றும் சிசிடிவி காட்சி மூலம், குற்றவாளி கேரள மாநிலம் வெள்ளறடை அலம்பாறையைச் சேர்ந்த சாந்தகுமாரி (44) என்பது தெரியவந்தது.
  • பைக் ஓட்டி வந்த சதீஷ் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் 2023 ஜனவரி 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
  • இந்த வழக்கை விசாரித்த குழித்துறை நீதிமன்ற நீதிபதி சுசின்குமார், சாந்தகுமாரிக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பைக் ஓட்டி வந்த சதீஷை விடுதலை செய்தார்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button