க்ரைம்

கழுத்து நிறைய நகை அணிந்து ரீல்ஸ் வெளியிட்ட பெண் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக் கோணம் பகுதியைச் சேர்ந்த ஏலக்காய் மொத்த வியாபாரி வினோத் குமார்.

இவரது மனைவி மதுமிதா. சமூக வலைதள பிரபலமான இவர், தனது வீட்டின் படுக்கையில் ரூ.500 நோட்டு கட்டுகளை பரப்பி விட்டும், கழுத்து நிறைய நகைகளை அணிந்தும், ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், மதுமிதாவின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷினால் அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 120 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை ராஜாக்கமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button