செய்திகள்

தூத்துக்குடி : மாதா ஆலய கட்டுமான பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 20 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி கிராமத்தில் மாதா ஆலய கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கட்டுமானப் பணியில் 50க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மேற்கூரை கட்டுமானத்தின் போது மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்ததில் 20 கட்டிட தொழிலாளர்கள் உள்ளே சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், இந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட மேற்கூரை விழுந்ததில் சிக்கியவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button