க்ரைம்
Trending

திண்டுக்கல் தனியார் கல்லூரியுடன் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி தொடர்பாக முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திண்டுக்கல் தனியார் கல்லூரியுடன் ஜப்பானைச் சேர்ந்த H2 Innovation co., ltd மற்றும் சென்னையைச் சேர்ந்த K-KCCS India p,ltd ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி முத்தரப்பு புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள திண்டுக்கல் பிஎஸ்என்ஏ (PSNA) பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று 13.08.2026 பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி முன்னேற்ற முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. இதில் பி எஸ் என் ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் துணைத் தலைவர் ரகுராம், ஜப்பானைச் சேர்ந்த H2 Innovation co., ltd நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி யோஷிக்கி மோரி (Yosuke Mori), மற்றும் K-KCCS India private limited நிர்வாக இயக்குனர் கருணாநிதி ஆகிய மூவரும் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி தொழில்நுட்ப புதுமை மற்றும் இந்தியா ஜப்பான் கல்வி மற்றும் தொழில்துறை முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மூலம் Green Hydrogen உற்பத்தி, fuel cell தொழில்நுட்பம், Hydrogen storage & Utilisation, RO நீர் மற்றும் கடல் நீர் சார்ந்த ஹைட்ரஜன் ஆராய்ச்சி, Renewable Energy Integration, Energy Storage, waste-to-Energy, Laboratory Development, prototype Development மற்றும் Joint R&D ஆகியவை இதன் முக்கிய ஆராய்ச்சி துறைகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த MoU ஒப்பந்தத்தின் முயற்சியின் முன்னோட்டமாக PSNA கல்லூரியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள் ஏற்கனவே ஜப்பான் சென்று Green Hydrogen, waste-to-Energy, Fuel cell மற்றும் sustainable Energy Technology தொடர்பான பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை நேரடியாக பார்வையிட்டு தொழில்நுட்ப அனுபவம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button