
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில், டாக்டர் திவாகர் போக்குவரத்து போலீசார் உடன் சேர்ந்து தலைக்கவசம் அணிவதன் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்வில், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாக்லேட் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் திவாகர், தலைக்கவசம் அணியாமல் வாகனங்கள் ஒட்டுவதன் மூலம் ஏற்படும் விபத்துகள் குறித்தும், அதனை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டி, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.


