
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரத்தில் மொத்தம் இருபத்தி மூன்று ஊராட்சிகள் உள்ளன . இந்த ஊராட்சிகளில் ஒன்றிய அலுவலகம் திண்டுக்கல் சாலையில் உள்ளது .
இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அலுவலக பணிகளுக்காக ஊராட்சி அலுவலக பணியாளர்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகத்தின் உள்ளே உள்ள தங்களது அறையின் வாசலிலேயே தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது ஆரம்பத்திலேயே வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டிக்காததால் ஆரம்பத்தில் ஒருவர் மட்டும் அலுவலக அறையின் முன்புறம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவந்த நிலையில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அலுவலக நடைபாதை வராண்டா முழுவதும் நிறுத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள நத்தம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மீதும் நடந்த சம்பவங்களை கண்டும் காணாமல் செயல்படும் நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது