
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பிள்ளையார் சிலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு.
திண்டுக்கல்லில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடைபாறைபட்டியிலிருந்து நடைபெற்ற பிள்ளையார் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பகுதியில் இருந்து கட்சி ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்படும் ஒரே ஒரு பிள்ளையார் சிலை ஊர்வலத்திற்கு மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த பிள்ளையார் சிலை ஊர்வலம் இன்று 16.09.2026 நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை கிராம மக்கள் மேள தாளங்களுடன், வெடிகள் வெடித்தபடி கொண்டு சென்றனர்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நக்சல் சிறப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர்வலம் செல்லக்கூடிய வழிகளில் உள்ள மசூதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக பேகம்பூர் பகுதி பெரிய மசூதி வாசலில் புகை குண்டு துப்பாக்கியுடன் காவல்துறை பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், பேகம்பூர் பெரிய மசூதி உள்ள இடத்தின் அருகே பிள்ளையார் சிலை ஊர்வலம் செல்லும் பொழுது மேளதாளங்கள் வாசிப்பதை நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட 500 மீட்டர் பகுதிகளுக்கு பஜனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின், பேகம்பூர் மசூதியை தாண்டி யானை தெப்பம் பகுதியில் மேள தாளங்கள் மீண்டும் தொடக்கப்பட்டது.