
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கக்கோரி, கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் போராட்டம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் ஓதுவார்களைப் பொறுத்தவரைக்கும், எங்கெல்லாம் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடக்கிறதோ, அந்தப் பூஜைகளை தமிழில் நடத்துவதற்கு தமிழில் பாராயணம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் அவர்கள் பணியமர்த்தப்படுவதாவும் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஓதுவார்களை இங்கு கொண்டு வந்து, வேலை நடந்து கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து, தமிழுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம் என்றும், முதலமைச்சர் எப்போதும் தமிழை முன்னிறுத்தக் கூடியவர் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதலமைச்சர் நிச்சயமாக பங்கேற்பார்கள் என்றும், அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் தான் கோவிலில் பணியாற்றி வருவதால் அவர்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.


