செய்திகள்

தங்க சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து – 60 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மேற்கு கோர்டோபனில் உள்ள அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு முழுவதும் சக தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பலர் மாயமாகியுள்ள நிலையில் பாறைகளையும் மண்ணையும் அகற்றக் கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாகத் தப்பியோடியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதே அடுத்தடுத்து சரிந்து விழுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலரும், வேறு வழியில்லாமல் இந்தச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button