செய்திகள்

செப்.25ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – மதுரையில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், செப்டம்பர் 22ஆம் தேதி திருவான்மியூரில் காமராஜர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button