
வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகம் என்ற சாமியாரிடம், சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மன் விசாரணை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மன் சாமியாரின் கன்னத்தில் அறைந்ததாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து மற்றொரு முறை அறைந்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணியினர், சாமியாரை தாக்கியதாக கூறப்படும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

