க்ரைம்

விருதுநகர் : ஜூஸ் கொடுக்க தாமதமானதால் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு – போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர் ஒலி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் கடைக்கு வந்து ஜூஸ் கேட்டுள்ளார்.

ஜூஸ் வழங்க தாமதமானதால், கடை ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற இசக்கிபாண்டி, இரவு நேரத்தில் மீண்டும் பேக்கரி கடைக்கு வந்து தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை கடைக்குள் வீசியுள்ளார். 

இதில் கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இச்சம்பவத்துக்கான காரணம் மற்றும் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படும் நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button