க்ரைம்
Trending

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – அரசு மருத்துவமனையில் அனுமதி

நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் ஆதார் கேட்டு அலைக்கழித்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தாலுகா செங்குளத்துப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று வடமதுரை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சித்திரவேல் என்பவர் அங்கு வந்தார். “ஊருக்குள் தான் செல்கிறேன்” எனக்கூறி அந்த பெண்ணை சித்தூர் குளம் அருகே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அங்கு பணியில் இருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதார் கார்டை எடுத்து விட்டு காலையில் வருமாறு கூறி அனுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button