
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாகல்பூரில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில், இருக்கைக்கு கீழே கேட்பாரற்று கிடந்த பொட்டலம் ஒன்றை சோதனையிட்டனர்.
அதில் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டை ரயிலில் கொண்டு வந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.