
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணைஇயக்குனர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது
முறையாக மருத்தும் படிக்காமல் அந்தோணிதாஸ்(68) என்பவர் நோயாளிகளுக்கு ஆங்கிலமுறை சிகிச்சை அளிப்பது தெரியவந்தது மேலும் அங்கு காலாவதியான கருக்கலைப்பு, ஆங்கில மாத்திரைகள் பறிமுதல் செய்து மருத்துவ அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வடமதுரை போலீசார் போலி டாக்டர் அந்தோணிதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருத்துவமனை அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
