
கேரளாவில் வரும் 26-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பொதுமக்கள் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை உட்கொள்வதால், மீன்களின் தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் என்ற நிலையில், தற்போது உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.இதனால் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


