க்ரைம்

சூதாட்டக் கும்பல் கைது – பணம், செல்போன்கள் வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் விளத்தூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் 17 பேரை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பிடிபட்டவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 14 பேர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவர்களிடமிருந்து 17 லட்சம் பணம், 17 செல்போன்கள், ஒரு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல பொருள்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 17 பேரையும் போலீசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button