க்ரைம்

திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் 4 இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர். தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறு,சிறு பொட்டலங்களாக மாற்றி, மீஞ்சூர் சுற்று வட்டாரங்களில் விற்பனை செய்து வந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா, சொகுசு கார், ஆட்டோ, செல்போன் உள்ளிட்ட பல பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button