
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். பள்ளி ஆசிரியரான இவர், கபிலன் நகரில் ஒரு வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார். இவருக்கும் ரவீந்திரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த ரவீந்திரன், ஆசிரியர் பிரேம்குமார் மீது வெடிகுண்டுகளை வீசி உள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்து சிதறியதில், ரவீந்திரன் படுகாயமடைந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
