சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா சிறப்பு பூஜைகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் ஆடித்தபசு திருவிழா பூஜைகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆடித்தபசு ஒன்றாம் மண்டகப்படி தலைவர் பொன்மணிசோழன், சிறப்பு பூஜைகளுக்காக மண்டகப்படிதாரர்கள் தரப்பில் கோயில் நிர்வாகத்திற்கு முறைப்படி செலுத்தப்படும் கட்டண தொகையைத் தவிர்த்து, தனியாக ரூ.10,000 கொடுத்தால் மட்டுமே பட்டாச்சார்யார்கள் பூஜைக்கு வருவதாக குற்றம் சாட்டினார். இது குறித்து பதில் அளித்த கோயில் நிர்வாக ஆணையர் ஞானசேகர், குற்றச்சாட்டு குறித்து உடனடி விசாரணை மேற்கொண்டு உரிய பதில் அளிப்பதாக உறுதி அளித்தார்.

