க்ரைம்

கடலூர் : பைக்கில் இருந்த பணத்தை திருடியவர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடைக்கு, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தை மதுபான கடை வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.9 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ரமேஷ் சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மதுபானகடை வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்பு காட்சிகளின் அடிப்படையில், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button