செய்திகள்

மது போதையில் இளம்பெண்கள் இருவர் அட்டகாசம்

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், அருகில் சென்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர்கள் தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இரு பெண்களையும் அவர்களது இருசக்கர வாகனத்தையும் பிடித்து நிறுத்தினர். தொடர்ந்து, நடுசாலையில் இறங்கிய பெண்கள், வாகனங்கள் செல்லக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவாங்கரை சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு பெண்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, அந்த இரு பெண்கள் யார், எங்கிருந்து வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button