செய்திகள்

மாணவர்கள் மீது தடியடி : முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம்

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து வி.சி.க-வின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button