தவறான வருமான வரி சான்றிதழை திருத்தம் செய்ய சென்ற இளைஞரை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த ஆமீனா பேகம் என்பவர், கணவர் இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தந்தை உயிரிழந்து தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது 2 மகன்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அமீனா பேகத்தின் மகன், அரசு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சொந்த வீடு வேண்டி விண்ணப்பிப்பதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள இ-சேவை மையம் மூலம் வருமான வரி சான்றிதழ் பெற்றுள்ளார். அந்த வருமான வரி சான்றிதழில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆமீனா பேகம் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞரிடம், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், வருமானவரிச் சான்றிதழ் நீக்கதிற்காக புழலுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட அமீனா பேகத்தின் மகன், ஒரு மாத காலமாக அதிகாரிகள் தன்னை அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

